games

img

ஹாக்கி போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி!

தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

14ஆவது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அந்தமான் நிக்கோபார் உடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு அணி ஆட்ட முடிவில் 43 க்கு 0 என்ற கோல் கணக்கில் அந்தமானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.