tamilnadu

img

அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: விவசாயிகள் முறையீடு

அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: விவசாயிகள் முறையீடு

ஈரோடு, ஜன.23- அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் முறையிடப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் வட்டம், வரதம்பாளையம் கிரா மத்தில் ரீ.ச.110ல் 1.66 ஹெக்டேர் அரசு நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதி வண்டிப்பாதை ஆகும். மற் றொரு பகுதியில் குட்டை உள்ளது. ஆனால், அவை முழுவதும் வண் டிப்பாதை என மட்டுமே உள்ளது. இதில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் என்பவர் மண் அள்ளி, நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கி ரமிக்க முயன்றார். இதற்கு எதி ரான முறையீடுகள், போராட்டங்க ளைத் தொடர்ந்து அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். தொடர் முறையீடுகளுக்கு பிறகு அவர் மீது விசாரணை நடைபெற்றது. இதன் விபரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அவர் தனது சகோ தரி மற்றும் உறவினர்கள் பெயரில் அந்நிலத்தை பட்டாவாக்க முயன் றார். நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் கடந்த ஜன.4 ஆம் தேதி தட்டிக் கேட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு,  கைகலப்பும் நடந்துள்ளது. இத னையடுத்து சத்தியமங்கலம் வட் டாட்சியரிடம் முறையிட்டபோது, காவல் துறையில் புகார் செய்யுங் கள் என்று கூறப்பட்டதாகத் தெரி கிறது. இதுகுறித்து வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி மனு அளித்து  பேசினார். முருகேசன் மீது நடவ டிக்கை எடுப்பதுடன், வண்டிப் பாதை போக மீதி நிலத்தை நீர்நிலை என வகைமாற்றம் செய்து குட் டையை அகலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்த பரிந்துரை அனுப்ப வேண் டும். அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொ கையை வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கங்களில் புதிய கடன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களையும் வலியுறுத்தி பேசினார்.  மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி  தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் பல்வேறு கேள்விகளுக்கு பதி லளிக்கப்பட்டது.