tamilnadu

உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பணி

உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பணி

ருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் களப்பணி மேற்கொண்டனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தோட் டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங் கலை நான்காம் ஆண்டு மாணவிகள் ஜெ.ஸ்ரீஜனனி, சி. ஸ்ரீதர்ஷினி, எஸ்.ஸ்ருதி, எஸ்.சுரேகா, எஸ்.சுசிவண்யா, எஸ். ஸ்வேதா, கே.தமிழரசி, பி.தருணிக ஆகியோர் புதிய பேருந்து  நிலையத்தின் அருகே உள்ள வடக்கு உழவர் சந்தையில் திங்க ளன்று களப்பணி மேற்கொண்டனர். அப்போது சந்தையின் நடைமுறைகளை, உதவி வேளாண் அலுவலர் விளக்கி னார். மேலும், உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய் தல், சந்தையின் நிலவரம், உழவர் சந்தை அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள், உழவர் சந்தை செயல்படும் நேரம், கடைகளின் எண்ணிக்கை, தினசரி குழுக்கள் முறை யில் கடை ஒதுக்கீடு செய்தல் பற்றியும் தெரிந்து கொண் டனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் அதிருப்தி

கோவை, ஏப்.1– சுங்கச்சாவடியில் செவ்வாயன்று நள்ளிரவு முதல் சுங்க  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டி கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், கணியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.  கார்களுக்கு 5 ரூபாயும், மல்டி ஆக்ஸில் லாரிகளுக்கு 10  ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள  40 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், இது அன்றாடம் பய ணிக்கும் வாகன ஓட்டிகள், சரக்கு போக்குவரத்து நிறுவ னங்கள் மற்றும் வணிகர்களை பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, கணியூர் சுங்கச்சாவடியை அடிக்கடி பயன்படுத்தும் சிறு வாகன உரிமையாளர்கள் மற் றும் லாரி ஓட்டுநர்கள் இதனால் செலவு அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளனர். கணியூர் சுங்கச்சாவடியில் பொதுவாக செப்டம்பர் மாதத் தில் மட்டுமே கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் நிலை யில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உயர்த்தப் பட்டிருப்பது பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பயணி ஒரு வர் கூறுகையில், “எரிபொருள் விலை ஏற்கனவே உயர்ந் துள்ள நிலையில், இந்தக் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்துகிறது,” என்றார்.