tamilnadu

img

மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

கோவை, அக்.2- வால்பாறை மலைப்பாதையில் மூன்றா வது கொண்டை ஊசி வளைவு அருகே தடுப்புச் சுவரை உடைத்து சுமார் 200 அடி பள்ளத்தில் சரக்கு லாரி கவிழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. வால்பாறைக்கு உள்ளூர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என 24 மணி நேர மும் சென்று வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை இரவு பொள்ளாச்சியில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர்  லாரியை அதன் ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் ஓட்டிச் சென்றுள்ளார். வால்பாறையில் விறகை இறக்கிவிட்டு, அதிகாலை 2 மணிய ளவில் அவர் பொள்ளாச்சி நோக்கி மலைப் பாதையில் திரும்பியுள்ளார். அப்போது, மூன் றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வலதுபுறம் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி உடைத் துக் கொண்டு, சுமார் 200 அடி பள்ளத்தில் சறுக்கி வந்துள்ளது. இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையின் குறுக்கே வந்து லாரி நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அவ் வழியாக வந்த மற்றொரு லாரியில் கயிறு  கட்டி, விபத்துக்குள்ளான ஈச்சர் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்படுத்தி னர். இதன் காரணமாக மலைப்பாதையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஈச்சர்  வாகனத்தை ஓட்டி வந்த பாலசுப்பிரமணியம் எவ்வித காயங்களும் இன்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.