tamilnadu

img

மொபைல் செயலி மோசடி வழக்கில் 9 பேர் கைது!

கோவை,டிசம்பர்.31- மொபைல் செயலி மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மொபைல் செயலி மூலம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என மோசடி செய்ததாகப் பணத்தை இழந்த 50க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 9 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 
மேலும் தலைமறைவாகவுள்ள 3 முக்கிய குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.