184 கி.மீ., ஓட்டம்: கல்லூரி மாணவர் சாதனை
கோவை, டிச.27- 24 மணி நேரத்தில் 184 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டு, கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை படைத் துள்ளார். கோவையிலுள்ள இந்துஸ்தான் கல்லூரி யில் உணவு தொழில்நுட்பவியல் துறையில் பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வருபவர் எஸ்.எஸ்.யோகேஷ் ராம். 21 கிலோ மீட்டர் தூரத்தை பின்னோக்கி ஓடி கின்னஸ் சாதனை படைத்த இவர், தற்போது புது முயற்சியை செய்துள்ளார். அதன்படி, 24 மணி நேரத் தொடர் சாலை ஓட்டப்போட்டியில் 184.05 கிலோ மீட்டர் ஓடி ஒரு அசாதாரண மைல் கல்லை எட்டியுள்ளார். கடந்த டிச.24 ஆம் தேதியன்று இந்துஸ்தான் கல்லூரியில் துவங்கி, கரூர் வரை சென்று மீண்டும் கல்லூரி யில் பயணத்தை நிறைவு செய்தார். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை, ஜாக்கி வேர்ல்டு சாதனை அமைப்பு அங்கீகரித் துள்ளது.
