tamilnadu

img

அதிமுக கொடி மரம் சாய்ந்ததால் லாரியில் சிக்கிய இளம்பெண்

வழக்கை திசை திருப்ப காவல்துறை முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

கோவை, நவ. 12– கோவையில் அதிமுக கொடி மரம் சரிந்து விழுந்ததில் நிலை தடுமாறிய இளம்பெண் லாரி மோதி படுகாயம் அடைந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்கை திசை திருப்ப முயற் சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.  கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ் வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், திங்க ளன்று பணிக்கு செல்வதற்காக, ராஜேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் சறுக்கி கீழே விழுந் துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி ராதாவின் கால் மீது  ஏறி விபத்து ஏற்பட்டது. இதில்  படுகாயமடைந்த ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  முன்னதாக, விபத்து நடந்த பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரின் திருமணத்திற்காகவும், முதலமைச்சர் வருகைக்காகவும் அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு அதிமுக கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. சாலை யோரத்தில் நடப்பட்டு இருந்த அதிமுக கொடி கம்பம் ராஜேஸ் வரி செல்லும்போது சரிந்து விழுந்துள்ளது. இதனை கவனித்த அவர் மேலே விழாமல் இருக்க வாகனத்தை சட்டென நிறுத்தியுள் ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்நேரம் அவ்வழியாக வந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு கால்களும் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம டைந்த நிலையில், இதுகுறித்து  காவல்துறையினர் நடவடிக்கை  மேற்கொள்ளாமல் வழக்கை திசை  திருப்ப முயற்சிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ராஜேஷ்வரியின் உறவினர்கள் கூறுகையில், கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்து ஏற்பட காரணம். இதனை  காவல் துறையினர் திட்டமிட்டு மறைக்கின்றனர் என ஆவேசமாக தெரிவிக்கின்றனர். அதேநேரம், இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், விபத்திற்கும், அதி முக கொடி கம்பத்திற்கும் தொடர் பில்லை. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த  லாரி ஓட்டுநர் முருகன் மீது, வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத் தியுள்ளார். அவர் மீது கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தனர். 

திமுக எம்எல்ஏ ஆறுதல்

இந்நிலையில் அதிமுக கொடி  கம்பம் சாய்ந்து விபத்தில் சிக்கி  படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றுவரும் பெண்ணை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாள ரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் நேரில் சென்று ஆறு தல் கூறினார். இதுகுறித்து அவர்  செய்தியாளர்களிடம் கூறுகை யில், நீதிமன்ற அறிவுரைக்குப் பின்னரும் இது போன்ற அராஜகச் செயல்களில்  தொடர்ந்து அதிமுக வினர் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது. சட்டத்தை மீறி கொடி  கம்பங்கள் அமைத்த அதிமுகவி னர் மீது காவல்துறையினர் பாகு பாடின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.  மேலும், அதிமுக கொடிக்கம் பம் சாய்ந்து ராஜேஸ்வரி என்ற பெண் விபத்துகுள்ளான வழக்கை சாதாரண விபத்து வழக்காக காவல் துறை மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதேபோல், விபத்தில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மருத்துவமனை யில் அனுமதித்த வடிவேல் என்ப வரை சட்டத்திற்கு புறம்பாக காவல் நிலையத்தில் இரவு வரை வைத்திருந்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆகவே, விபத்திற்கு காரணமான உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கொடி கம்பங்கள் உரிய அனுமதி பெற்றுதான் நடப்பட்டதா? என் பதை கோவை மாநகர காவல் ஆணையாளர் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள் ளார்.