கோவை, ஏப்.9-தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்குவாக்களிக்குமாறு சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் பிரிக்கால் தொழிற்சாலை வாயிலில் செவ்வாயன்று தொழிலாளர்களிடம் வாக்கு கேட்டு ஏ,கே.பத்மநாபன் பேசியதாவது: 13 ஆண்டுகளாக நிர்வாகத்தின் அடக்குமுறை, பொய்வழக்குகள், பழிவாங்குதல்களுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்களைநடத்தி வரும் பிரக்கால் தொழிலாளர்களுக்கு சிஐடியு துணை நிற்கும். கடந்த காலங்களிலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை சிஐடியு நடத்தியுள்ளது. அவற்றில் பங்கேற்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் பி.ஆர்.நடராஜன். தொழிலாளர்களின் உரிமைகளை மறுத்தும் அவர்கள் செலுத்திவரும் பிஎப், இஎஸ்ஐ பணத்தைக்கூட சூறையாட முயலும் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டஇந்த தேர்தலை வாக்களர்கள் பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் தொழிலாளர்களின் பிரச்சனைகளோடு இணைத்து பிரிக்கால் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண சிஐடியு போராடும். அதற்கு ஆதரவாக பி.ஆர்.நடராஜனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க தொழிலாளர் வர்க்கம் அவருக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள்விடுத்தார்.முன்னதாக, இந்த ஆலைவாயில் கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணை தலைவர்கள் எம்.சந்திரன், எஸ்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் அருணகிரிநாதன், பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்க தலைவர் பி.நடராஜன், பொதுச் செயலாளர் எம்.சுவாமிநாதன், பொருளாளர் எம்.ஜெயப்பிரகாஷ் நாராயணன், நிர்வாகிகள் எம்.ராஜேந்திரன், எம்.பாபு, டி.துரைசாமி, கே.சதீஷ்குமார், ஏ.தனுஸ்கோடி, மகேஸ்வரி, ஜி.சுகந்தி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.