கோவை, ஏப்.11-பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்கக்கோரி திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என ஆர்ய வைத்திய சிகிச்சாலயா தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆர்ய வைத்திய சிகிச்சாலயா எம்ளாயிஸ் யூனியன் அலுவலகத்தில் வியாழனன்று சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்திலுள்ள மலையாளி உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக, இந்த பேரவையில் சிஐடியு மாநில துணை தலைவர்கள் எஸ்.சந்திரன், எஸ்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.சந்திரன், சந்தோஷ் மற்றும் ஆர்ய வைத்திய சிகிச்சாலயா யூனியன் தலைவர் கே.சி.சுரேஷ், செயலாளர் ஆர்.பாஸ்கர், பொருளாளர் வாசுதேவன் திருமேனி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.