திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தை ஒரு தனியார் தொழில்முனைவோரிடம் ஒப்படைக்கும் முடிவை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுப்பது என முதல்வர் பினராயி விஜயன் அழைப்பின் பேரில் நடந்த கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதில் உறுதியாக இருந்தால், மாநில அரசு எந்த வகையிலும் ஒத்துழைக்காது என்று முதல்வர் கூறினார்.மாநில அரசு முக்கிய பங்குதாரராகக் கொண்ட நிறுவனத்திடம் திருவனந்தபுரம் விமான நிலைய நிர்வாகத்தை மத்தியஅரசு ஒப்படைக்க வேண்டும். தனியார்-பொதுத்துறை கூட்டாக கொச்சி, கண்ணூர் சர்வதேச விமான நிலையங்களை வெற்றிகரமாக இயக்கிய அனுபவம் மாநில அரசுக்கு உள்ளது என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். இந்த கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது.