tamilnadu

img

நிவாரண வாகனம் மோதி பெண் பலி ஆறுதல் தெரிவிக்க சென்ற திமுகவினர் கைது

கோவை, மே 18 -   கோவையில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பங் கேற்ற நிவாரணம் வழங் கும் நிகழ்ச்சிக்கு பொருட் களை ஏற்றி சென்ற வாக னம் மோதியதில் பெண் ஒரு வர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு ஆறுதல் தெரி விக்க சென்ற திமுகவினரை காவல்து றையினர் கைது செய்ய முயன்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத் தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கரடிமடை பகுதியில் ஞாயிறன்று அத்தொ குதியின் சட்டமன்ற உறுப்பினரும்,  உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.வேலுமணி பங்கேற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக நிவாரண பொருட்களை கொண்டு வந்த லாரி மோதி அதே பகுதியை சேர்ந்த மாரி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பெரியபுள்ள என்ற பெண், கை உடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனையறிந்த திமுகவினர் பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றுள்ளனர். அப்போது திமுகவினரை தடுத்து நிறுத்திய காவல்து றையினர் கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சிஆர்.இராமசந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் வடவள்ளி துரை, ஒன்றிய செயலாளர் சேனாதிபதி,  இளைஞரணி துணை அமைப்பாளர் தியாகு,  ரவி உள்ளிட்ட பலரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.  இச்சம்பவத்தையறிந்து கோவை மாந கர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி உள் ளிட்ட ஏராளமான திமுகவினர் காவல் நிலை யம் முன்பு கூடினர். இதையடுத்து, கைது  செய்யப்பட்ட அனைவரையும் காவல்து றையினர் விடுவித்தனர். இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.