tamilnadu

img

சின்டிகேட் அமைத்து தேங்காய் உரி மட்டை விலையைக் குறைப்பதா?

உடுமலை, செப். 10- தேங்காய் உரி மட்டையின் விலையை குறைத்த மட்டை மில் உரிமையாளர்களின் நட வடிக்கையை திரும்பப் பெற விவ சாய சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. உடுமலை மற்றும் பொள் ளாச்சி பகுதியில் பல ஆயிரக்க ணக்கான ஏக்கர் விவசாய நிலங் களில் பல லட்சம் தென்னை மரங் கள் உள்ளன. இதன் மூலம் நேரடி யாகவும் மறைமுகமாக பல லட் சக்கணக்கானோர் பயன் பெற்று வந்தார்கள். இதன் ஒரு பகுதி யாக தேங்காய் மட்டையை மூல பொருளாகக் கொண்டு கயிர் மற்றும் காயர் பிளாக் என்ற பொருட்கள் உற்பத்தி செய்து உள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தென்னை விவசாயிகளிடம் இருந்து மட்டை மில் உரிமை யாளர்கள் ஆயிரம் மட்டைகள் கொண்ட ஒரு வண்டி (லோடு) விலை ரூ.1800 முதல் 1900 வரை கொள்முதல் செய்து வந் தார்கள்.  ஆனால் கடந்த சில நாட்க ளாக மட்டை மில் முதாலளிகள் தங்களுக்குள் பேசி வைத்து (சின் டிகேட்) ஒரு வண்டி தேங்காய் மட்டையை ரூபாய் ஆயிரம் என முடிவு செய்தனர். இதனால் தற் போது மட்டை கொள்முதல் நிறுத் தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் கூறும் போது, பல ஆண் டுகள் விவசாயிகள் தங்கள் கடுமை யான நெருக்கடிக்கு மத்தியில் தென்னை மரங்களை காப்பாற்றி வந்தார்கள். தென்னை மரத்தில் இருந்து ஒரு தேங்காய் பறிக்க ஒரு ரூபாய் செலவு ஏற்படுகிறது. மேலும் தற்போது உரம் உள் ளிட்ட ஈடு பொருள்கள் விலை உயர்வுக்கு மத்தியில்,  வருடத்தில் பல மாதங்கள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் இருந்த போது தற்போது செயல் பட்டு வரும் மட்டை மில்களால் தேங் காய் மட்டைக்கு என்று ஒரு நியா யமான விலை கிடைத்தது. அதை யும் விவசாயிகளிடம் இருந்து பறிக்கும் வகையில் மட்டை விலையைக் குறைத்தால் தான், இனி கொள்முதல் செய்வோம் என்ற முடிவு செய்து உள்ளது மட்டை மில் உரிமையாளர்களின் அராஜகமான செயல். மட்டை மில் உரிமையாளர்கள்  தங்களின் நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக் காமல், போராட்டம் நடத்தாமல் கொள்முதல் விலை குறைப்பு என் பதை விவசாய சங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும், பழைய விலைக்கே கொள்முதல் செய் தால் மட்டுமே மட்டையை விற் பனை செய்வோம். விரைவில் நல்ல முடிவை மட்டை மில் உரிமை யாளர்கள் எடுக்கவில்லை என் றால், அனைத்து தென்னை விவ சாயிகளையும் இணைத்து போராட்டம் நடத்துவோம் என் றார். (ந.நி)