tamilnadu

img

ஆனைமலை-நல்லாறு அணை திட்டம் எப்போது நிறைவேறும்? போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

பரம்பிக்குளம்  ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த  சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் உடுமலை நகராட்சி, உடு மலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் திட் டங்களும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.  இந்நிலையில், ஆனைமலை யாறு மற்றும் நல்லாறு அணைகள் இன்னும் கட்டப்படவில்லை. இந்த அணைகள் கட்டிமுடிக்கப்பட்டால் மட்டுமே இரு மாவட்ட விவசாயிக ளும், பொதுமக்களும் பிஏபி பாசனத் திட்டத்தில் முழுப்பயனை பெற முடி யும். இதன்காரணமாக மேல்நீராற்றில் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் முழுவதும் கேரளா வழியாக சென்று கடலில் வீணாக கலக்கிறது.  மேலும், மேல்நீராறு, கீழ்நீராறு கிடைக்கும் தண்ணீர் சோலையாறு, பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, பரம்பிக்குளம் வழியாக சர்க்கார்பதி வந்து அங்கிருந்து காண்டூர் கால்வாய் மூலம் 49 கி.மீ தூரத்தில் உள்ள திரு மூர்த்தி அணைக்கு கொண்டு வரப் பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை 14 கிமீ சுரங்கம் அமைத்து  நல்லாற்றிற்கு கொண்டுவந்து அங்கே  அணை கட்டினால் கூடுதலாக 7.25 டிஎம்சி தண்ணீரை சேமிக்க  முடியும். அங்கிருந்து திருமூர்த்தி அணைக்கு நீரை விரைவாக  கொண்டு  வந்து பாசனத்திற்கு முழுமையான  நீரை வழங்க முடியும். மேலும் இரு இடங்களில் மின்சார உற்பத்தியையும் துவக்க முடியும்.  முன்னதாக, மலைவாழ் மக்கள் கிராமமான குழிப்பட்டிக்கு அருகே நல்லாறு அணை கட்ட தேர்வு செய்யப் பட்ட இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நல்லாற்றில் வரும் நீரின் அளவை கணக்கிடவும், அணையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மலை யிலுள்ள பாறைகளின் உறுதித்தன் மையைக் கண்டறியவும் பல இடங்க ளில்  துளையிட்டு ஆய்வும் செய்து அள வீடு கற்களும் நடப்பட்டுள்ளன. அணையின் உயரமும் கல்வெட்டாக செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்பே நல் லாறு அணை கட்ட தமிழக அரசு சார் பில் ஆய்வு செய்த பின்பும் மீண்டும் ஆய்வுக்குழு அமைத்து காலம்தாழ்த்தி வருவது திருப்பூர், கோவை மாவட் டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏமாற் றம் அளிப்பதாகவே உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை யின் போதும் அணை கட்ட நிதி ஒதுக் கப்படும் என காத்திருக்கும் அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றமே கிடைகிறது. தற்போது, இந்த ஆண்டும் நிதி ஒதுக் காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில், நல்லாறு அணை கட்டப்படும் இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.ஆா்.மதுசூதனன், உடுக்கம் பாளையம் பரமசிவம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன்பின் அவர்கள் கூறு கையில், திருப்பூர், கோவை மாவட் டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகை யில் தமிழக அரசு உடனடியாக நல் லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி விரைவில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த னர். - (ந.நி)