திருப்பூர், செப். 25 – திருப்பூர் மாவட்டத்தின் ஆறாவது ஆட்சியராக விஜய கார்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதன்கிழமை காலை 7மணியள வில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜய கார்த்திகேயனை மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வரவேற் றார். இதையடுத்து ஆட்சியர் அலுவ லக அறையில் கோப்புகளில் கையெ ழுத்திட்டு விஜய கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
எந்த நேரத்திலும் சந்திக்கலாம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது: பொது மக்களின் பிரச்சனைகள், குறைகளை எப்போது வேண்டுமானாலும் என் னிடம் தெரிவிக்கலாம். உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். தமிழக அரசின் எல்லா திட்டங்கள், கட்ட மைப்பு மேம்பாடு, சேவை மற்றும் குறை தீர்ப்பு பணிகளை நிறைவேற்று வேன். எந்த நேரத்திலும் மக்கள் என்னை அணுகலாம். முதல்வரின் சிறப்பு குறை தீர்ப்புத் திட்டம், குடி மராமத்துப் பணிகளை நிறைவேற்று வதில் கவனம் செலுத்துவேன். அதே போல் பொது மக்களும் ஆட்சி நிர் வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு விஜயகார்த்தி கேயன் கூறினார்.
நேரடி ஐஏஎஸ் அதிகாரி
திருப்பூர் மாவட்டம் தொடங் கப்பட்டபோது மாவட்டத்தை உரு வாக்கும் சிறப்பு அலுவலராகவும், பின்னர் முதல் ஆட்சித் தலைவராகவும் நேரடி ஐஏஎஸ் அதிகாரியான சமய மூர்த்தி பொறுப்பேற்று பணி புரிந்தார். அதைத் தொடர்ந்து மதிவா ணன், கு.கோவிந்தராஜ், ஜெயந்தி மற்றும் கே.எஸ்.பழனிச்சாமி என அடுத்தடுத்து ஆட்சியராக நியமிக் கப்பட்டவர்கள் அரசுப் பணியில் இருந்து ஐஏஎஸ் தகுதி உயர்வு பெற்று வந்தவர்களாவர். சமயமூர்த்திக்கு அடுத்து, நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக தற்போது விஜய கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நிய மிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக் கது.