tamilnadu

உடுமலை மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

அவிநாசி, நவ. 22- அவிநாசியில் உரிமமின்றி மணல் அள்ளி வந்த லாரியை வியாழனன்று வருவாயத்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உரிமமின்றி மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைய டுத்து வருவாய்த்துறையினர் அவிநாசி பகுதியில் கோவை,  மேட்டுப்பாளையம், திருப்பூர் செல்லும் சாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவிநாசி, வேலாயுதம்பாளையம் அருகே பெருந்துறையில் இருந்து கோவை நோக்கி வந்தமணல் லாரியை வழி மறித்து, விசாரணை செய்தனர். இதில் மணல் அள்ளி வர தேவையான உரிமம் இல்லாதது தெரியவந்தது. மேலும், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர், உதவியாளர் ஆகி யோர் உரிய பதில் அளிக்கவில்லை.இதையடுத்து மணல் லாரியைப் பறிமுதல் செய்த வருவாய்த்துறை யினர், அவிநாசி காவல் நிலையித்தில் புகார் அளித் தனர். காவல் துறையினர் விசாரித்து வருகின்ற னர்.

ஆம்னி வேனில் தீ விபத்து

அவிநாசி, நவ. 22- அவிநாசி அருகே வஞ்சிபாளையம் மேம்பாலத் தில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீ பிடித்து எரிந்தது. திருப்பூர் மாவட்டம், மங்கலம் சாலையிலிருந்து அவிநாசி நோக்கி வெள்ளியன்று ஆம்னி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனை உதய குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதில் நான்கு பேர் பயணம் செய்தனர். இந்த வேன் வஞ்சிபாளை யம் மேம்பாலம் அருகே வந்த போது வேனிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. உடனடியாக  வேனை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கி விட்ட னர். தகவலறிந்த அவிநாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பராமரிப்பில்லாத நகராட்சி சாலைகள் சீரமைக்கப்படுமா!

உடுமலை, நவ. 22- பராமரிப்பின்றி பழுதடைந்து கிடக்கும் உடுமலை நகராட்சி சாலைகள் சீரமைக்க வேண்டுமென புதிய ஆணையாளரிடம் பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் மொத்தமாக உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுக ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் படாத நிலையில், இங்கு போதிய வசதிகள் எதுவும் இல்லாமல் மக் கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலை யில், கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு சரவணக்குமார் என் பவர் ஆணையாளராக பொறுப்பு ஏற்றார். அப்போது சாலை ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். புதிய மழைநீர் வடிகால் வசதிகளை செய்தார்.

அப்பணிகள் இன்று வரை முழுமை பெற வில்லை. மேலும் நகரில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான 250க் கும் மேற்பட்ட கடைகள் புதிதாக ஏலம் நடத்தி வாடகைக்கு விடப்பட்் டது. இதன் மூலம் நகராட்சி நிர்வா கத்திற்கு அதிக வருவாய் கிடைத்த போதும், தற்போது வாடகை தர முடியாமல் வியாபாரிகள் பல கடை களை முடிய நிலையில் உள்ளனர். உடுமலை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள மனமகிழ் மன்ற கட் டடத்தை மருத்துமனையாக விரி வாக்க நடவடிக்கை எடுக்கப்பட் டது. ஆனால் நீதி மன்ற நடவடிக்கை மூலம் மீண்டும் அக்கட்டடம் சங்க நிர்வாகத்தின் வசம் சென்று விட்டது. இவைதவிர உடுமலை நக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.39.46 கோடி ரூபாயும், சாலைகள் அமைக்க ரூ.17 கோடியும் என மொத் தம் ரூ.56.5 கோடி என்ற  மதிப்பில் உடுமலை நகர் பகுதி முழுவதும் என சுமார் 97 கிலோ மீட்டர் தொலை விற்கு பாதாள சாக்கடை திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதனால் நகரில் உள்ள அனைத்து ரோடுகளிலும் குழி கள் தோண்டப்பட் டது. பல வருடங்கள் வேலைகள் நடை பெற்றது. பாதாள சாக்கடை திட்ட வேலைகளால் தோண்டப்பட்ட குழியால்பல உயிர் பலிகள் ஏற்பட்டன.  இந்நிலையில்  கடந்த ஆண்டுமுதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட் டிற்கு வந்தது. ஆனால் திட்டத்தில் பல்வேறு முறைகே டுகள் நடைபெற்ற தால், அனைத்து சாலைகளும் குழி யும்,குண்டுமாக காணப்பட்டது. இத னால் வாகனங்கள் செல்ல மிகவும் சிர மம் எற்பட்ட நிலை யில், தற்போது பெய்து வரும் மழை யால் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. பல் வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகளை சரி செய்ய தோண் டப்பட்ட குழிகளை மூடாமல் இருப் பதால் விபத்து  ஏற்படும் நிலை உள்ளது.  எனவே, இதுபோன்ற மக்கள் நல பணிகளை நிறைவேற்ற வேண் டும். மேலும், தினமும் பல ஆயிரக் கணக்கான விசாயிகள் வந்து செல் லும் இடமாக உள்ள சந்தையில் சாலை மற்றும் கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும். பாதாள சாக்கடை அமைப்பின் குளறுபடி களை சீரமைக்க வேண்டும். உள் ளாட்சி மன்ற தேர்தல் நடத்தி மக் கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று இக்குறைகளைத் தீர்க்க நடவ டிக்கை எடுப்பார் என உடுமலை நக ராட்சி மக்கள் எதிர்பார்த்த நிலை யில், புதிய  நகராட்சி ஆணையாள ராக பொறுப்பேற்றுள்ள பவுன்ராஜ் சரி செய்ய வேண்டும் என்பதே பொது மக்களிள் கோரிக்கையாக உள்ளது.

அசோக் சக்ரா விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், நவ. 22- குடியரசு தினவிழாவின் போது (2020) மத்திய அர சால் வழங்கப்படும் அசோக சக்ரா விருதிற்கு  இயற்கை சீற்றம், விபத்து, தீவிரவாத ஊடுருவல், தீ விபத்து, வழிப் கொள்ளை ஆகியவற்றிலி ருந்து பொது மக்களை தனிப் பட்ட முறையில் காப்பாற்றி சாதனை புரிந்தவர்கள்  விண் ணப்பிக்கலாம். தகுந்த ஆவ ணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இதற் கான படிவம் பெற்று நவம் பர் 29 ஆம் தேதிக்குள் வி்ண் ணப்பம் செய்திட மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத் துள்ளார்.