சேவூரில் ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஜூலை 8- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.4 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங் களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் 140 மூட்டைகள் வரத்து இருந்தன. இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,300 முதல் ரூ.6,600 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.5,700 முதல் ரூ.5,900 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.4,900 முதல் ரூ.5,200 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.
பெருமாநல்லூரில் நாளை மின் தடை
அவிநாசி, ஜூலை 8- பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதனன்று (ஜூலை 10) நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரு மாநல்லூர், கணக்கம் பாளையம், காளிப்பாளை யம், புதுப்பாளையம், சடை யம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பா ளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண் டிப்பாளையம், நெருப் பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொர வலூர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தினர்அறிவித்துள்ளனர்.