நிலுவை மானியத் தொகையை விரைந்து வழங்கிடுக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
திருப்பூர், ஆக. 4 – வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கான மானியத் தொகை நிலுவையை விரைந்து வழங்குமாறு மத்திய அரசை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வற்பு றுத்தி உள்ளனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத் திக்குத் தேவையான நவீன இயந்தி ரங்களின் கண்காட்சி நிட் ஷோ ஞாயி றன்று தொடங்கியது. இக்கண்காட்சி யைத் தொடக்கி வைத்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுச் சங்கத் துணைத் தலை வருமான ஏ.சக்திவேல் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: இந்த கண் காட்சியின் மூலம் பின்னலாடை உற் பத்தியாளர்கள் நவீன இயந்திரங் களைப் பற்றி தெரிந்து கொள்ள வசதி யாக இருக்கிறது. திருப்பூரிலிருந்து உற்பத்தியாளர்கள் அயல்நாடுக ளோடு வர்த்தகப் போட்டி போட வேண்டி இருப்பதால், நவீன முறை யில் பேசன் கார்மெண்ட்ஸ் செய்ய தயாராக வேண்டும். அதற்கு இந்தக் கண்காட்சி பலவகையில் உதவிகர மாக இருக்கும். மேலும், பின்னலாடை உற்பத் திக்கு தேவையான நவீன இயந்திரங் கள் வாங்கும்போது 15 முதல் 20 சத விகிதம் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆனால் இயந்திரங்க ளுக்கான மானியத்தொகையைப் பெற இதுவரை 7 ஆயிரம் விண்ணப் பங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இக்கண்காட்சியில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பிரிண் டிங், டெய்லரிங், வாசிங் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்க ளின் 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றன. இதில், பிரிண்டிங் துறையில் அதிவேகத்தில் பிரிண்டிங் செய்ய நவீன இயந்திரங்கள் புது வரவாக காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன. இந்த கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருமாநல்லூர் அருகே பெண்ணிடம் நகையை பறித்தவர் கைது
அவிநாசி, ஆக. 4 - பெருமாநல்லூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவர் கைது செப் யப்பட்டார். பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மனைவி சரஸ்வதி(56) கடந்த மாதம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொ ழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனைத் தேடி வந்தனர். இந்நிலையில், குன்னத்தூர் சாலையில் நடை பெற்ற வாகனச் சோதனையின்போது சந்தேகத்திற்கு இட மளிக்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகரன்(27) என்பதும், கடந்த மாதம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 5பவுன் தங்கநகை யைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் ராஜசேகரனைக் கைது செய்து சிறை யில் அடைத்தனர். மேலும் ராஜசேகரனிடமிருந்து 5 பவுன் தங்கநகையை பறிமுதல் செய்தனர்.
தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை
தாராபுரம், ஆக. 4 - தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் பகி ரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாராபுரம் புதிய பேருந்து நிலையம், அண்ணாநகர் (பெடரல் பேங்க் சந்து) , நாடார் தெரு, அலங்கியம், காளிபாளையத்தில் உள்ள ஒரு சைக்கிள் ஸ்டேண்டு, கொளத்துப்பாளைம் மில்கேட் ஆகிய பகுதிகளில் கடை வைத்து லாட்டரி விற்பனை செய்யப்படுகி றது. இதனால் வட்டிக்குக் கடன் வாங்கி பரிசு விழும் என்ற நம்பிக் கையில் பலர் லாட்டரி வாங்குகின்றனர். இதனால் பல்வேறு குடும்பத்தினர் கடு மையாகப் பாதிக்கப்படு கின்றனர். எனவே காவல் துறையினர் சட்ட விரோத மாக லாட்டரி விற்பனை யில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.