கோவை, டிச. 8 – தேசிய மாணவர் படை மாணவர்களின் தலைமைத்துவ முகாம் கோவையில் துவங் கியது. இதில் நாடு முழுவதுமிருந்து 17 மாண வர் படை இயக்கங்களை சேர்ந்த 300 மாண வர்கள் பங்கேற்றுள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டி இ்ந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூ ரியில் நடைபெறும் இம்முகாமிற்கு தமிழ் நாடு பீரங்கி தேசிய மாணவர் படையின் கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் தலைமை வகித்தார். இந்த முகாமை கோவை மாவட்ட தேசிய மாண வர் படையின் கமான்டர் கர்னல் எல்சிஎஸ். நாயுடு முறைப்படி தொடங்கி வைத்தார் .இந் துஸ்தான் கல்லூரியின் முதல்வர் கண்ண தாசன் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். முகாமில் கலந்து கொள் ளும் மாணவர்களுக்கு தலைமை பண்பு , வாழ்க்கை கலை, மனித ஒழுக்கம், உடல் சீரமைப்பு, இராணுவத்தின் சட்ட திட்டங் கள் மற்றும் அதன் அமைப்பு முறை, நாட்டுக் காக உழைத்த தலைவர்களின் வாழ்க்கை முறைகள், அரசியலமைப்பு முறைகள் குறித்து வகுப்புகள் எடுக்கப்படும் என தெரி வித்தார். இதுகுறித்து தேசிய மாணவர் படை அலு வலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் கூறு கையில், இந்தியா முழுவதும் உள்ள 17 தேசிய மாணவர்படை இயக்ககங்களின் உள்ள 300 தேசிய மாணவர் படை மாண வர்கள் பங்கேற்றுள்ளனர். முகாமில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க நாடு முழு வதிலும் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்க உள்ளனர் எனத் தெரிவித்தார்.