tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் இடங்களை மாற்றி குளறுபடி

சரி செய்ய அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

காங்கயம் சாலை ஆர்விஇ லேஅவுட்டை சேர்ந்தோர் பல்லடம் சாலை ஆர்விஇ லே-அவுட்டுக்கு மாற்றப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல், பல்லடம் சாலை டிஎம்சி காலனியைச் சேர்ந்தோர் தாராபுரம் சாலை டிஎம்சி காலனிக்கு மாற்றப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்.

திருப்பூர், அக். 12 – உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் திருப்பூர் மாநகராட்சியில் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட வீதிகளை ஒன்றிணைத்து ஒரு வார்டின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குளறு படி அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக் காக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக, மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கடந்த 4ஆம் தேதி வெளியிட்டார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றி யங்களைச் சேர்ந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 380 ஆண்கள், 10 லட்சத்து 34 ஆயிரத்து 34 பெண்கள், 224 மூன்றாம் பாலினத்தவர் என 20 லட்சத்து 63 ஆயி ரத்து 638 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட மாநகர வாக்காளர் பட்டியலில், வீதிகள் மாறி பெயர் இடம் பெற்றிருப்பதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி காங்கயம் சாலை யில் உள்ள ஆர்விஇ லே-அவுட் பகுதி 45 ஆவது வார்டு ஆகும். பல்லடம் சாலையில் உள்ள மற்றொரு ஆர்விஇ லே-அவுட் பகுதி என நினைத்து, காங்கயம் சாலை யில் உள்ள ஆர்விஇ லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 953 வாக்காளர்களை மாற்றிச் சேர்த்துள்ளனர். 

அதேபோல், தாராபுரம் சாலை தெற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள 51ஆவது வார்டு டிஎம்சி காலனியில் உள்ள 434 வாக்காளர்களை பல்லடம் சாலையில் உள்ள டிஎம்சி காலனியான 52ஆவது வார்டுக்கு மாற்றி உள்ளனர். மேற்கண்ட பகுதியில் மட்டும் 1,377 வாக்காளர்களின் பெயர் இடம் மாறி உள்ளது. இந்த குளறுபடி நீக்கப்படாவிட்டால், காங்கயம் சாலையில் இருந்து பல்லடம் சாலையில் உள்ள ஆர்விஇ லே-அவுட் பகுதிக்கு வாக்காளர்கள் வர மூன்றரை கி.மீ தூரம் கடக்க வேண்டும். இவ்வளவு தூரம் வந்து, அவர்கள் எப்படி வாக்களிக்க முடியும்? இதன் மூலம் பலர் வாக்களிக்கும் ஜனநாயக கடமை ஆற்ற தயங்குவார்கள். மேலும், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குளறுபடி இது என்று கூறி னார். மேலும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் என தேர்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட் டது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூ ராட்சி அளவில் வழங்கப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் நகல் கடந்த 9ஆம் தேதி தான் வழங்கினர். இவை அரசியல் கட்சியினரால் தற்போது சரி பார்க்கப்படு கிறது.

4ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்கா ளர் பட்டியல் நகலை அரசு நிர்வாகத்தினர் 9ஆம் தேதிதான் கட்சியினருக்கு வழங்கி யுள்ளனர். இவ்வாறு காலதாமதமாக வழங் கப்பட்டுள்ள நிலையில், குளறுபடியான பட்டியல் திட்டமிட்டு தயார் செய்யப்பட் டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகி றது. ஆகவே இந்த குளறுபடிகளை உரிய முறையில் திருத்தி, தக்க முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றனர். இது குறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலக கவனத்துக்கு அரசியல் கட்சியி னர் கொண்டு சென்றுள்ளனர். சரியான பாகம் வார்டில் இடம்பெறும் வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.