tamilnadu

img

ஆசிரியர் தினவிழா

திருப்பூர், செப். 6- திருப்பூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வியாழனன்று ஆசிரியர் தின விழா கொண் டாடப்பட்டது. திருப்பூர் வடக்கு சொக்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரி யர் தினம் விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அன்னபூரணி தலைமை வகித்தார். பள்ளி தன்னார்வலர் ச.அங்க முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவர்களுக் கும், ஆசிரி யர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளித் தலைமையாசிரி யர் பா.ஜெயலெட்சுமி நன்றி கூறினார். திருப்பூர் அருகே ஏ.வி.பி.லே அவுட் குடியிருப் போர் நல சங்கம் சார்பில் வியாழனன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு எஸ்.பழனிசாமி,  தலைமை வகித்தார். ஆசிரியர்  ஜெயபால் வரவேற்றார். கம்பன் கழக திருப்பூர் மாவட்ட செயலாளர் சோ.ராமகிருஷ் ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் ஆர்.ஈஸ்வரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.ருக்மணி, டி.என்.துரை,  காந்திய மக் கள் இயக்க மாவட்ட செயலாளர்  கே.வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்