கோவை, ஜூலை 29 - அரசியல் லாபத்திற்காக வேல் உருவத்தை சாலையில் வரைந்து அவமதித்த அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடதுசாரி கட்சி களின் சார்பில் புதனன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவ லகத்தில் புகார் மனு அளிக்கப்பட் டது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, யு.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியம் ஆகி யோர் கோவை மாநகர மத்திய உதவி ஆணையர் கார்த்திகேயனி டம் அளித்த புகாரில் கூறியிருப் பதாவது, அண்மையில் பெரும் பகுதி தமிழ் மக்கள் வழிபடக்கூடிய முருகன் துதி பாடலான கந்தசஷ்டி கவசம் குறித்து தேவையற்ற பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட் டதை இருகட்சிகளின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் வன் மையாக கண்டிகின்றோம். அதே சமயம் தமிழக மக்கள் வழிபடக் கூடிய முருகனின் அடையாள சின்னங்களில் ஒன்றான வேல் சின்னத்தை சாலையில் வரைந் தும், முருகன் துதி கோசத்தை தரை யில் எழுதியும் இழிவுபடுத்துவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
குறிப்பாக மனித கால் தடம் பதி்க்கக்கூடிய வாய்ப்பு மற்றும் வாகனங்கள் அதன் மீது ஏறி செல்லும் வாய்ப்பு இருப்பதை அறிந்தும் கூட சாலைகளில் வேல் சின்னத்தை வரைந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு குறுகிய அரசியல் லாபத்திற்காகவும், சமய நல்லிணக் கத்தை சீர்குலைக்கக்கூடிய வகை யில் சில அமைப்புகள் மேற்கொள் ளும் நடவடிக்கைகள் கோவை மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத் தையும், வெறுப்பையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளதை காவல் துறை விழிப்புணர்வுடன் கண் காணித்து உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆகவே, இவ்வாறு மோசமான செயலில் ஈடுபட்ட அமைப்புகள் மீதும், நபர் கள் மீதும் எவ்வித நிர்பந்தத் திற்கும் அடிபணியாமல் நடவ டிக்கை எடுத்திட இடதுசாரி கட்சி களின் கோவை மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.