tamilnadu

img

விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு ஒப்படைப்பதில் மெகா ஊழல்.... மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையருக்கு எளமரம் கரீம் எம்.பி., கடிதம்

புதுதில்லி:
அனைத்து சட்டங்களும் மீறப்பட்டு, நாட்டிலுள்ள ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு வழங்கியிருப்பதில் எண்ணற்ற ஊழல்கள் நடந்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக்குழுத் தலைவர்எளமரம் கரீம், மத்திய லஞ்ச ஒழிப்பு  ஆணையர் (Central Vigilance Commissioner) சஞ்சய் கோத்தாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எளமரம் கரீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஊழல்களின் விவரங்கள் வருமாறு:

நாட்டில் இலாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூர் ஆகியவிமான நிலையங்களை, அதானி எண்டர்பிரசைஸ் என்னும் நிறுவனத்திற்கு ஐம்பது ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்படைத்திருப்பதற்காக, ஏர்போர்ட் ஆப் இந்தியா நிறுவனம் பின்பற்றிய ஏல நடைமுறைகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன.

கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை
அதானி நிறுவனத்திற்கு ஆறு விமான நிலையங்களை ஒப்படைத்திருப்பது தொடர்பாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அலுவலகப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில் விதிகள்பின்பற்றப்படுவதில் மிகப்பெரிய அளவில் அலட்சியம் காட்டப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. இவற்றின் மூலம் அதானி நிறுவனம் நாட்டில் ஆறு மாநிலங்களிலும் விமான தளங்களில் உள்ள சொத்துக்களிலிருந்து கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்துதரப்பட்டிருப்பதை நன்கு காண முடிகிறது. விமான நிலையங்களை அதானி நிறுவனத்திற்கு ஒப்படைத்ததில் ஏஏஐஎனப்படும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவோ அல்லது மத்திய சிவில் விமானத்துறை அமைச்சகமோ போதுமான அளவிற்குக் கவனம்செலுத்தவில்லை என்பதும் முன்ஜாக்கிரதையுடன் நடந்துகொள்ளவில்லை என்பதும் முதல் நோக்கிலேயே நன்கு தெரிகிறது.

விமான நிலையங்களை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவற்றின் மொத்த திட்டச் செலவினம்,குறைந்தபட்ச ஏல மதிப்பு முதலானவற்றை அந்நிறுவனம் நன்கு தெரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் வெளிப்படையாகவே வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஏற்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மிகப்பெரிய அளவினதாகும். எனவே நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகள் மூலமாகஇவை புலனாய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.பிபிபிஏசி எனப்படும் (Public Private Partnership Appraisal Committee) பொது-தனியார்-ஒத்துழைப்பு மதிப்பீட்டுக் குழுவானது தன் சொந்த வழிகாட்டுதல்களையே மீறி, அதானியின் நிறுவனத்திற்கு ஒப்புதலை அளித்திருக்கிறது. மேலும் தான் தலையிடுவதற்கு சட்டரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லாதநிலையிலும், அமைச்சரவையால் அமைக்கப்பட்டுள்ள அதிகாரம் படைத்த செயலாளர்களின் குழு (Empowered Group of Secretaries) இவ்விவகாரங்களில் தலையிட்டிருக்கிறது. மேலும் இவ்வாறுஅதானி நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது, 1994ஆம் ஆண்டு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப்இந்தியா சட்டத்தின் ஷரத்துக்களையும் மற்றும்1937 விமான விதிகளையும் (Aircraft Rules)மீறிய செயலாகும்.  இவ்வாறு அதானி நிறுவனத்திற்காக ஒப்படைத்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்துமே ஒட்டுமொத்தத்தில் தவறானவையாகும்.மேலும் பிபிபிஏசி கூட்டத்தில் உறுப்பினர்கள், பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரிகளில் சிலர் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகளில் சிலர் இவற்றில் நடைபெற்றுள்ள பெரிய அளவிலான நிதி ஊழல்களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1.ஒவ்வொரு பயணிக்குமான கட்டணத்துடன் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் காணோம் (absence of Minimum Reserve Priceper passenger fee) 
அதானி நிறுவனத்திற்குத் தாரை வார்க்க அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு விமான நிலையங்களுமே தற்போது செயல்பட்டுக் கொண்டிருப்பவைகளாகும். எனவே ஒவ்வொரு விமானநிலையத்திலும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் பெறப்படும் கட்டணம் எளிதாகக் கண்டுபிடித்து உறுதிப்படுத்திட முடியும். ஆனால் இதுவரையிலும் ஏஏஐ அதனைக் கண்டுபிடித்திடவோ, அந்தத்தொகையை அதானி நிறுவனத்துக்கு ஒப்புக்கொண்டுள்ள தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்திடவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டிடவில்லை. மாறாக போட்டியிட்ட இதர நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையுடன் அதானி நிறுவனத்தொகையை ஒப்பிட்டு அதானி நிறுவனம்தான் அதிக அளவில் தொகையை நிர்ணயித்திருந்ததாக பீற்றிக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, ‘இந்தியா போட்டிஆணையம்’ (Competition Commission of India) விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும்.

2. அதானிக்கு விசுவாசமான விமானத்துறை அமைச்சகம்
அதேபோன்று பிபிபிஏசி அளித்துள்ள திட்ட அறிக்கை பல அம்சங்களில் முழுமையற்று வாயைப் பிளந்துகொண்டிருக்கிறது. அதானி நிறுவனத்திற்கு ஒப்படைக்கவுள்ள ஆறு விமான நிலையங்களும் பல அம்சங்களிலும் வெவ்வேறானவைகளாகும்.  ஆனால் அனைத்தையும் ஏஏஐ ஒரேவிதமான முறையில் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதானி நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது.அதானி நிறுவனத்திடம் ஆறு விமான நிலையங்களையும் ஒப்படைப்பதற்கு சிவில் விமானஅமைச்சகம் தேவையற்ற அவசரத்தைக் காட்டியிருக்கிறது. இவ்வாறு விமான நிலையங்களை ஒப்படைப்பதற்கு மத்திய சிவில் விமானத்துறை அமைச்சகம் நாட்டின் பொதுத்துறையின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மாறாக, அதானி நிறுவனத்திற்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இதுதொடர்பாக உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருக்கும் காலத்தையும் மற்றும் மிகப்பெரிய அளவிலான சொத்தின் மதிப்புகளையும் பரிசீலனை செய்துஇதனைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.  

3.எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அதுதான் ஏற்றுக்கொண்டிருக்கும் துறையில் அனுபவம் பெற்றிருக்கிறதா என்று பார்ப்பது முக்கியம். விமானங்களையும் விமானத் தளங்களையும் நிர்வகிப்பது என்பது இதர கட்டுமானத் தொழில்கள் போன்றோ அல்லது ரியல் எஸ்டேட்வர்த்தகம் போன்றதோ கிடையாது. விமானங்களையும் விமான நிலையங்களையும் இயக்குதல்என்பது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உயிருடன் சம்பந்தப்பட்ட விஷயமாகும். மேலும் இதன் ஊழியர்கள் நியமனமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும்விமான ஊழியர்கள் மற்றும் ஏஏஐ ஊழியர்கள் ஆகிய அனைவரின் நலன்களும் இதில் கண்டுகொள்ளப்படவே இல்லை. மாறாக, அதானி நிறுவனம் சிறிது காலத்திற்கு ஏஏஐ ஊழியர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என்றுமட்டும் கூறப்பட்டிருக்கிறது. இது பொதுத்துறைஊழியர்களை, தனியாரின் நலன்களுக்குக் காவுகொடுப்பது என்பதைத் தவிர வேறல்ல. இதுபோன்று அடிமை வர்த்தக முறை, முதலாளித்துவ நாடுகளில் கூட கிடையாது.

முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்துக
4.மேலும் இவ்வாறு அதானி நிறுவனத்திற்கு விமான நிலையங்களை ஒப்படைப்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து சட்டங்களும் மீறப்பட்டிருக்கின்றன.   ஆறு விமான நிலையங்களும் மாநகரங்களின் இதயப் பகுதிகளில் இருக்கின்றன. 

தொடர்ச்சி 3 ஆம் பக்கம்....