உடுமலை, ஜூலை 23- உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 14ஆவது வார்டு பகுதியில் குடிநீர் வழங் காமல் உள்ளதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். உடுமலை நகராட்சி பகுதிகளில் பொது மக்க ளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதை பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டியின் சார்பில் அடிப்படை வசதி களை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக 14ஆவது வார்டு பகுதி மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு உறுப்பினர் தண்டபாணி தலை மையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், நகர குழு உறுப்பினர் சுதா சுப்பிரமணியன், கிளை செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட திரளான பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையை மனு பெற்று கொண்ட ஆணையர், உடனடி யாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்என்று கூறியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.