tamilnadu

img

தாராபுரம் - புதுக்கோட்டைமேடு பகுதியில் சுகாதார சீர்கேடு: நகராட்சி அலுவலகம் முற்றுகை

தாராபுரம், நவ 7 - தாராபுரம்- புதுக்கோட்டைமேடு பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட புது கோட்டை மேடு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியி ருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளதாக கூறி நகராட்சி ஆணையர் அறை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் கேட்ட போது சமுதாய நலக்கூடம் கட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கட்டி முடித்தபின்பு அந்த கட்டிடத்தில் தாராபுரம் நகர்பகுதியில் உள்ள பல் வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கள் கொண்டுவரப்பட்டு கொட்டிவைக்கப்பட்டுள் ளது. மேலும் அங்கேயே இயந்திரங்கள் மூலம் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு அரைக்கப்படுகிறது. இதன் காரணமாக குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொட்டிவைக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து புழுக்கள் மற்றும் வண்டுகள், குப்பை கழிவுகள் குடியிருப்புகளுக்கு வந்துவிடு கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந் தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். எனவே இந்த குப்பை கிடங்கை இப்பகுதி யில் இருந்து அகற்றவேண்டும் என தெரிவித்தார்.  போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத் திய அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் களைந்து சென்றனர்.