நாமக்கல், செப். 23- திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் செய்திடக் கோரி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம், எலச்சிபாளை யம் இலுப்புலி செல்லும் சாலை யில் அரசு ஆரம்ப துணை சுகா தார நிலையம் உள்ளது. இங்கு கிராம செவிலியர்கள் நான்கு பேரும், 12 ஊழியர்களும் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலை யத்திற்கு எலச்சிபாளையம், சந்தப் பேட்டை, கொன்னையார், சின்ன எலச்சிபாளையம், சமத்துவபுரம், அகரம், கொத்தம்பாளையம், கிளாப்பாளையம், வேலங்காடு, அத்திமரப்பட்டி, இலுப்புலி என 20க்கும்மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற் பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதன்படி தினசரி சுமார் 200 லிருந்து 300 பேர் வரை நோயாளிகள் வந்து செல் கின்றனர். இந்நிலையில், இந்த மருத்து வமனையில் பணிபுரியும் செவிலி யர்கள், நோயாளிகளை முறை யாக கவனித்து சிசிச்சை அளிக் காமலும், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களிடம் மிக கடுமையாக பேசி வருவதாகம் கூறப்படுகிறது. இதனால் நோயா ளிகள் பெரும் சிரமத்திற்குள்ளா கும் நிலையில், சம்மந்தப்பட்ட செவிலியர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு இரவு நேர பணியில் மருத்துவரை நியமித்து, 24 மணி நேரமும் செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திங்க ளன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் மருத்துவமனை மருத்துவர் கரு ணாகரனிடம் மனு அளித்தனர். அப்போது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்து வர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.