தருமபுரி,டிச.9 - தீா்த்தமலை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் படுக்கை வசதி களை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத் துக்கு டி.அம்மாபேட்டை, வேடகட்ட மடுவு, மொண்டுகுழி, டி.ஆண்டியூா், பொய்யப்பட்டி, சட்டையம்பட்டி, கட் டவடிச்சாம்பட்டி, பாளையம், வீரப்ப நாய்க்கன்பட்டி, வேப்பம்பட்டி, மாம் பாடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியிலுள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்துச் செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின் றனா். மேலும், கா்ப்பிணிகளுக்கு பிரசவ முன் கவனிப்பு, சித்த மருத்து வம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத் துவ பிரிவுகளும் உள்ளன. இந்த நிலையில், மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் சேதமடைந்தும், நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், தர மான படுக்கைகள், விரிப்புகள் இல்லாததால் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற முடிவதில்லை. தீா்த்த மலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான படுக்கை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.