tamilnadu

img

ஆனைமலை ஆற்றில் நேரடியாக கலக்கும் சாக்கடை நீர்

 நடவடிக்கை எடுக்குமா? பேரூராட்சி நிர்வாகம்

பொள்ளாச்சி, டிச.17-  பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஆற்றில் நேரடியாக சாக்கடை நீர் கலந்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகாவில்.  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இங்கு நீராதா ரமாக ஆனைமலை ஆறு இருந்து வரு கிறது. ஆனைமலை நீரேற்று நிலையத்தி லிருந்து வேட்டைக்காரன் புதூர், ஆனை மலை, ஒடையகுளம் ஆகிய மூன்று பேரூ ராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.   இந்நிலையில் ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சாக்கடை நீர், ( மனிதகழிவு) மலக்கழிவு நீர் போன்ற கழிவுகள் ஆற்றின் ஓரங்களில் நேரடி யாக கலப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்  இதில் கலக் கின்ற சாக்கடை கழிவுநீரை சுத்திக ரிப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் ரங்காராம் நினைவு பூங்காவில் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட்டது.ஆனால் குறைந்த நாட்களே செயல்படுத்தப் பட்ட இந்த திட்டம் தற்போது பயன் பாடின்றி காட்சிப்பொருளாக மாறியுள் ளது என்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  ஆனைமலை ரங்காராம் பூங்காவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை புனர மைப்பு செய்து சுத்தமான குடிநீர் விநியோ கிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இக்குடிநீரை பருகும் இப்பகுதியின ருக்கு நோய்த் தொற்று உள்ளதா என மருத்துவமுகாம் அமைத்து பரிசோதனை செய்யவேண்டும். பொள்ளாச்சி அம்பராம்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தைப்போன்று நிரந்தரமாக செயல்பட இனி வரும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.