tamilnadu

img

சாக்கடை நீர் வடிகாலாக மாறி கிடக்கும் மயிலாடுதுறை சாலைகள் கடும் தொற்று நோய் பாதிப்பில் மக்கள்

தரங்கம்பாடி, ஜன.4- நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரத்தில் கடந்த 2003-ல் 42 கோடி மதிப்பீட்டில் முழுக்க, முழுக்க பெரும் ஊழலோடு நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால் கடந்த 2 ஆண்டுகளாக மயிலாடுதுறை மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஒவ்வொரு நாளும் ஆளாகி வருவதாக புகார் கூறப்பட்டு வருகிறது.  இதில் பிரதான தரங்கம்பாடி சாலை வழியாக தான் நாகை, திருநள்ளார், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற முக்கிய பகுதிகளுக்கு அதிக பேருந்து கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகள வில் தொடர்ந்து செல்லும் சூழலில் கடந்த 8 மாதங்களில் அச்சாலை நெடுக பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு சாக்கடை நீர் வழிந் தோடுகிறது. இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டு கடும் இன்னல்கள் மக்களை வாட்டி வதைக்கிறது.  ஒரு புறம் கடும் துர்நாற்றம், கடும் தொற்று நோய்கள் பாதிப்பு என சொல்ல முடியாத பெரும் துயரத்தில் மயிலாடு துறை மக்கள் உள்ளனர். வெளியூருக்கு செல்வதற்காக இங்கு வருபவர்கள், அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என எவரும் குறித்த நேரத்திற்கு இங்கு வரவோ, திரும்ப செல்லவோ முடியாத நிலை நீடித்து வருகிறது.  குறிப்பாக உயிருக்கு போராடிக் கொண்டு ஆம்புலன்ஸில் வருப வர்களின் உயிரும் கூட சில நேரங்களில் தாமதத்தால் பறிபோகும் அவல நிலை உள்ளது. தருமபுரம்- மார்க்கெட் வழி யாக செல்லும் குறுகலான சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதால் அச்சாலையும் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான சாலையாக காட்சி தருகிறது.  மயிலாடுதுறை நகர் முழுவதும் சாக்கடை துர்நாற்றமும், சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் வாழ அருகதையற்ற நிலையில் உள்ளதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இராதாகிருஷ்ணன் மக்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் சம்பிரதாய கடமை யாக அதிகாரிகள் மக்கள் புகார்களை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், சாலைகளை மனிதர்கள் நடந்து செல்லக் கூட சீரமைக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற வேதனையுடன் மயிலாடுதுறை மக்கள் உள்ளனர்.