districts

குடிநீரில் கலந்து வரும் சாக்கடை நீர்: நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை, டிச.31-  மயிலாடுதுறை நக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீரில் பாதாளச் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக நகர்மன்ற கூட்டத் தில் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மயிலாடுதுறை நக ராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் பாதாள  சாக்கடைத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கியது முதல் பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்து  வரு கின்றன.  இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலை களில் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரு கிறது. கடந்த சில நாட்களாக  நகராட்சியால் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.  மயிலாடுதுறை நக ராட்சியில் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், நக ராட்சி உறுப்பினர் இலக்கியா சபரி என்பவர் பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை பாட்டிலில் எடுத்துவந்து புகார் கூறி னார். மேலும், சம்பத், ஜெய லெட்சுமி உள்ளிட்ட பல்வேறு  உறுப்பினர்களும் அதே  குற்றச்சாட்டை தெரிவித்தனர்.