tamilnadu

வழக்கறிஞர் ஆகலாமே..!

தமிழகத்தில் ஏழு அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. ஐந்து மற்றும் மூன்றாண்டுப் பட்டப்படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு வழக்குகளை எடுத்து நடத்தலாம். பல்வேறு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகப் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழக்கறிஞர்களாகப் பணிபுரியலாம். அதோடு பல்வேறு கட்டங்களைத் தாண்டி நீதிபதிகளாக நியமனம் செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளன.