tamilnadu

img

திருச்செங்கோடு அருகே தொடர் திருட்டு

நாமக்கல், அக்.10- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஒரு கிராமத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் 15 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில்  உள்ளது கருமனூர் கிராமம். இக்கிராமத்தில் பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் அதிகாலையில் நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்த போது வீட்டின்  பீரோ திறக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.  பீரோவில் இருந்த 11 சவரன் நகை மற்றும் ரூ.87  ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது.  அதேபோல பிரபு வீட்டிற்கு சிறிது தொலைவில்  உள்ள பருவங்காடு பகுதியில் வசித்து வரும்  மாரிமுத்து முத்தாயி  தம்பதி வீட்டில் நாலே முக்கால்  சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் திருடப் பட்டுள்ளது. இதையடுத்து கோனாங்காடு பகுதியில் வசித்து வரும் நித்யா என்பவரது  வீட்டில் 8ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு வெள்ளி  அரணாக்கொடி, வாகன ஆர்சி புத்தகம் இரண்டு  ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.   இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம்  காவல் துறைக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து  வந்த காவல்துறையினர் கைரேகையை நிபுணர் களுடன் ஆய்வு நடத்தினர்.  மேலும் இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.  அதிகாலை நேரத்தில் ஒரே கிராமத்தில் அருகருகே  உள்ள வீடுகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.