tamilnadu

செப்.27 முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தொழில் அமைப்புகள் - ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

கோவை, செப். 24–  அநியாய வரி உயர்வு - குடிநீர் விநியோக உரிமை தனியாருக்கு தாரைவார்த்த கோவை மாநகராட்சி யைக் கண்டித்து செப்.27 ஆம் தேதி யன்று நடைபெறும் முழு அடைப்பு  போராட்டத்திற்கு கோப்மா மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆத ரவை தெரிவித்துள்ளது.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில், கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பா ளர் சங்கம் (கோப்மா) சார்பில் அதன் தலைவர் மணிராஜ் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகராட்சி யில் உயர்த்தியுள்ள 100 சதவிகித சொத்துவரியை கண்டித்தும், மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடி நீர் விநியோக உரிமையை தனி யார் நிறுவனமான சூயஸ் நிறுவ னத்திற்கு வழங்கப்பட்டதை கண் டித்தும், வருகின்ற செப்.27 ஆம் தேதியன்று திமுக தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து ஒருநாள் அடையாள வேலை நிறுத் தம் மற்றும் கடையடைப்பு போராட் டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத் திற்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வேலை நிறுத் தத்தால் 3 ஆயிரம் தொழில் கூடங் கள் மூடப்படும். சுமார் ரூ.20 கோடி வரை தொழில் உற்பத்தி பாதிக்கும் என தெரிவித்தார்.  மேலும், மத்திய நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தற்போது அறிவித்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. மத்திய - மாநில அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியு றுத்தி எந்தவிதமான பயனுமில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பொருளாதார மந்தநிலை இருக்கும் சூழ்நிலையில் மாநில அரசு 100 சதவிகித சொத்து வரி விதித்துள்ளதை ஏற்கமுடியாது. மின்  கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வின் காரணமாக கட்டிட வாடகை உயரும் அச்சம் எழுந்துள் ளது. இந்த சூழல் காரணமாக சிறு- குறு தொழில்கூடங்கள் நலி வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜாப் ஒர்க் தொழில்களுக்கு முழு  வரிவிலக்கு, மோட்டார் பம்ப்செட் டிற்கு கொள்முதல் மற்றும் விற் பனை ஒரே வரியாக 5 சதவிகிதம்,  ரூ.1.5 கோடி வரை உற்பத்தி-விற் பனை செய்கின்ற நிறுவனங்க ளுக்கு முழு கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பின்போது துணைத்தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆதரவு 
இதேபோல், கோவை மாவட்ட  ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.கே.சுகுமாறன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, சொத்துவரி உயர்வு, பன்னாட்டு நிறுவனத்திற்கு குடி நீர் விநியோகம் ஆகியவற்றை கண் டித்து செப்.27 ஆம் தேதியன்று நடை பெறும் முழு அடைப்பு போராட் டத்திற்கு முழு ஆதரவை தெரிவித் துக் கொள்கிறோம். அந்நாளில் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள் ளார்.