குடவாசல், ஜூன் 17- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 14-ஆவது மாவட்ட மாநாடு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் த.பெருமாள்ராஜ் தலைமை தாங்கி னார். மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீ பன்நாதன், முன்னாள் மாநில செய லாளர் இரா. யேசுதாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலன் அசோகன், ஜேசிஐ தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன், ஆசிரியர் தீபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை தொடங்கி வைத்து மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் மாநில தலைவர் பேராசி ரியை எஸ்.மோகனா கருத்துரை வழங்கினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி வாசித்தார். மாவட்ட பொரு ளாளர் ந.மகேந்திரன் நிதி அறிக்கை யினை சமர்ப்பித்தார். முன்னதாக கொர டாச்சேரி ஒன்றிய தலைவர் பா. பாஸ்கரன் வரவேற்புரையாற்றினர். ஒன்றிய செயலாளர்.ப.குமார் நன்றி கூறினார். மாநாட்டில் புதிய மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவிலிருந்து 17 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக தை.புகழேந்தி, செய லாளராக யு.எஸ்.பொன்முடி, பொரு ளாளராக வா.சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநில செய லாளர் எஸ்.டி பாலகிருஷ்ணன் நிறை வுரையாற்றினார். முன்னதாக செட்டி சிமிழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டில், முன்பருவக் கல்வி முதல் முதுநிலைப் பட்டம் வரை தர மான இலவசக் கல்வியினை அரசின் பொறுப்பில் வழங்கிட வேண்டும். அரசு பள்ளிகள் மூடப்படுவதோ, அல்லது இணைக்கப்படுவதோ கூடாது. நீட் தேர்வினை உறுதியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.