சென்னை, ஆக. 28 - தமிழகத்தில் ‘மூ டநம்பிக்கை ஒழிப்பு மற்றும் தடுப்புச் சட்டம்’ கொண்டு வர வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. தேசிய அறிவியல் மனப் பான்மை தின கருத்தரங்கம் அண்மையில் லயோலா கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், லயோலா மாணவர் அரவணைப்பு மையமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ்வில், முனைவர் டி.ஆர்.கோவிந்தராஜன் பேசினார். மூடநம்பிக்கை வாதிகள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை மந்திரமா? தந்திரமா? எனும் நிகழ்வின் மூலம் முனைவர்.சேதுராமன் விளக்கினார். இதன் தொடர்ச்சியாக ‘மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் தடுப்புச்சட்டத்தை’ தமிழகத்தில் இயற்றிடக் கோரி கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், அறிவி யல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் தேமொழிச் செல்வி (வடசென்னை), மோசஸ் பிரிவு (திருவள் ளூர்), தென்சென்னை மாவட்டத் தலைவர் மோகனா உள்ளிட்டோர் பேசினர்.