tamilnadu

img

கல்வி கட்டணக் கொள்ளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள்

சேலம், ஜூலை 18- சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள கோகுல் நாதா  இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடு தலாக வசூலிப்பதாக குற்றம் சாட்டி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம், முள்ளுவாடி கேட் அருகே கோகுல் நாதா இந்து மகா ஜன மேல்நிலைப் பள்ளி அரசு உதவியுடன் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு கல்வி கட்டண மாக ரூ.2.500 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.6 ஆயிரம் வசூ லிக்கப்பட்டு வருகிறது. ஆகவே உடனடியாக கல்வி கட்ட ணத்தை குறைக்க வலியுறுத்தி அப்பள்ளியைச் சேர்ந்த பனி ரண்டாம் வகுப்பு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பேரணியாகச் சென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆட்சியர் அலு வலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையி னர் மாணவர்களை சமாதானப் படுத்தி கோரிக்கைகளை மனு வாக வழங்கும்படி 5 மாண வர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதித் தனர். அப்போது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்ற னர்.  அப்போது மாணவர்கள் கூறு கையில், அரசு உதவி பெறும் பள்ளியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத அவல நிலையில் உள்ளது. அரசு உதவி பேரும் பள்ளியில் தனியார் பள்ளிகளை போலவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்களால் இந்த தொகையை செலுத்த முடி யாத சூழ்நிலை உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.