tamilnadu

img

சாலைப் பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுக


அவிநாசி, செப். 8- சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கை விட வேண்டும் என வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி சனியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியைத் தனியாருக்கு வழங் கும் முடிவை தமிழக அரசு கை விட வேண்டும். பணி நீக்கத் தால் உயிர் நீத்த சாலைப்பணி யாளர்களின் வாரிசுதாரர்களுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி பணி வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அவிநாசி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணி யாளர்கள் சங்க உட்கோட்டத் துணைத் தலைவர் பி.முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உட்கோட்ட செயலாளர் ஏ.முருகேசன், கோட்ட பொருளாளர் ஆர்.கருப்பன், கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் திரளான தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

தாராபுரம்

இதேபோல், தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியா ளர் சங்கத்தின் சார்பில் மூலனூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் அலுவல கம் முன்பு உட்கோட்ட தலைவர் ர.செல்வக்குமார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.கோரிக்கை களை விளக்கி உட்கோட்ட செயலாளர் சிவராசு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உள்பட ஏராளமான சாலைப் பணியாளர்கள் கலந்து கொண் டனர். முடிவில் உட்கோட்ட பொருளாளர் கி.தனபாலன் நன்றி தெரிவித்தார்.