tamilnadu

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறுக கோவையில் நாளை வாலிபர் சங்கம் பேரணி

கோவை, ஜன. 20 –  மதரீதியாக மக்களை பிரிக்கும் குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கோவையில் ஜன.22 (நாளை) வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற உள் ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களை மதரீதியாக பிரிக்கும் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் என்பிஆர், என்ஆர்சி ஆகிய மக்கள் தொகை கணக் கெடுப்பை துவக்குவதற்கு உத்தரவிட்டுள் ளது. மத்திய மோடி அரசின் இச்சட்டத் திற்கெதிராக நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  இதன்தொடர்ச்சியாக சிஏஏ, என் ஆர்சி, என்ஆர்பி ஆகிய சட்டங்களை கண் டித்தும், தமிழ்நாட்டில் இதனை நடை முறைப்படுத்தக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதனன்று மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்தை நடத்துகிறது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட் டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். புத னன்று மாலை 4 மணிக்கு மகளிர் பாலி டெக்னிக் கல்லூரி அருகில் இருந்து துவங் கும் பேரணியானது ஆவராம்பாளையம் சாலை, விகேகே மேனன் சாலை வழியாக சென்று ஜெயா பேக்கரி அருகில் நிறை வடைகிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தல் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.ஏ.முகமதுரியாஸ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வாலிபர் சங்க மாநில தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். இந்திய அரசியல் அமைப்பு சட் டத்தை பாதுகாக்க மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய இளைஞர்கள் அணிதிரண்டு வரவேண்டும் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.