திருப்பூர், ஜூலை 5– தமிழகத்தில் விளைவிக்கப்பட்டு மருத் துவத்துக்கு பயன்படுத்தப்படும் கண்வலி விதை விவசாயம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு நேர்மை மக்கள் இயக்கம் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பழ.இரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர் பகுதி, திண் டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டாரங்கள், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, பரமத்தி போன்ற இடங்களில் விவசாயிகள் கண் வலி விதை உற்பத்தி செய்து வரு கிறார்கள். உலகிலேயே வணிக ரீதி யாக இந்த பகுதியில் மட்டும் தான் கண்வலி விதை விவசாயம் நடைபெற்று வருகிறது. மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத் தப்படும் இந்த விதை, பல லட்சம் மக்களின் உயிர் காக்கும் மருந்தாக இப்போது வரை இருக்கிறது. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ கத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கண் வலி விதை ஒரு மறைபொருளாக, கள்ளச் சந்தையில் விற்பது போன்ற ஒரு சூழலில் இருப்பது அவலமாகும். விவசாயிகள் தொடர்ந்து விதைகளை இடைத் தரகர்களிடமே விற்று வருகிறார்கள். விவ சாயிகளிடம் குறைந்த விலையில் விதையை வாங்கும் இடைத்தரகர்கள் பெருமளவில் லாபம் சம்பாதிப்பவர்களாக இருக் கிறார்கள். இந்நிலையில்தான், தமிழ்நாடு கண் வலி விதை விவசாயிகள் சங்கம் தொடங் கப்பட்டு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து இன்றைக்கு இச்சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக, விதைக்கான விலையை, நிர்ணயம் செய்தும் வருகிறது.
முன்பு இடைத்தரகர்கள் 80 கோடி ரூபாய் விவசாயிகளிடம் மோசடி செய்ததை ஆதாரத்துடன் புகார் செய்து, அதற்கான விசாரணையும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வாயிலாக நடைபெற்றது. அதில் முழுமையாக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும், விதை விலை உயர அது ஒரு காரணமாக அமைந்தது. நடப்பு ஆண்டில், பெரும் செலவில் உற்பத்தி செய்யப்பட்ட கண்வலி விதை ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் என்னும் அளவில் குறைந்து விட்டது. எனவே மூலனூரிலும், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயத்திலும் விவசாயிகள் கூட்டம் நடத்தி கண்வலி விதையை கிலோ ஒன்றுக்கு ரூ.3,500 க்கு கீழ் விற்பதில்லை என்ற முடிவு எடுத் துள்ளனர். அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெளிப்படையான விற்பனைச் சந்தையை உருவாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நீண்ட கால மாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. கண்வலி விதையை அங்கீகரிக் கப்பட்ட பொருளாக மாற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் இருக்கிறது. ஆகவே, கண் வலி விதை விற்பனை சந்தை தொடர்பாக அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும். விதையை வாங்கும் நிறுவனங்கள் குறித்தும், என்ன விலைக்கு அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் ஆய்ந்து, கண்வலி விதை குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், ஆண்டுதோறும் எத்தனை ஏக்கர் விவசாயம் செய்யப் படுகிறது. உற்பத்தி, விற்பனை குறித்த முழுமையான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் பழ.இரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.