tamilnadu

img

சர்வதேச வேலையின்மை எதிர்ப்பு தினம் வாலிபர் சங்கம் சார்பில் பேரணி-பொதுக்கூட்டம்

சேலம், செப்.15- சர்வதேச வேலையின்மை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. சர்வதேச வேலையின்மை எதிர்ப்பு தினம் செப்டம்பர் 15 அன்று  கடைபிடிக்கப்படுகிறது. பாஜக ஆட்சியால் வேலையின்மை அதிகரித்த வண்ணம் உள்ளது.  குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு  வேலை என்பது எட்டாக்கனி யாகவே உள்ளது . 2014 ஆம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணங்களில் வேலை  இன்மையே ஆகும்.  தற் பொழுது இந்தியா பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. பண மதிப்பு நீக்க நடவ டிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றுடன் மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளாமல் வெளியிடப்பட்ட கொள்கை அறி விப்புகள் இத்தகைய நெருக்கடிக்கு கொண்டு சென்று உள்ளது.  சேலம் உருக்கு ஆலையை தற் பொழுது மத்திய பாஜக அரசால் தனியாருக்கு விற்பனை செய்ய உலக அளவில் ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. சேலம் உருக்காலை பாதுகாக்க வேண்டும் எனவும் வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை  விடுத்துள்ளனர். இக்கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியை முன்னால் வாலிபர்  சங்க நிர்வாகிகள் எம்.கனக ராஜ், பி.பாலகிருஷ்ணன் ஆகி யோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி அரியாக் கவுண்டம்பட்டி, சர்க்கரை புளிய மரம் லட்சுமி தியேட்டர் வழியாக தட்டு கடை மைதானத்தில் நிறை வடைந்தது. இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் பி. கந்தசாமி தலைமை தாங்கினார்.  மாநகர மேற்கு பகுதித் தலைவர்  ஜெகநாதன் வரவேற்புரையாற் றினார். இதில் வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாலச் சந்திர போஸ், சேலம் உருக்காலை சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பி.சுரேஷ்குமார், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பி.கணேசன், மாவட்டப் பொருளாளர் வி. வெங்கடேஷ், மாநிலக்குழு உறுப் பினர் எம்.கற்பகம், மாவட்ட துணை செயலாளர் ஆர்.வி.கதிர்வேல், வி.பெரியசாமி, வி.ஸ்டாலின் ஆகி யோர் உரையாற்றினர். மாநகர  மேற்கு பகுதி பொருளாளர் டி. கண்ணதாசன் நன்றி கூறினார். 

நாமக்கல்

இதேபோல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் சார்பில் பள்ளிபாளை யத்தில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  வாலிபர் சங்க பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.கே. பிரபாகரன் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் இ.கோவிந்த ராஜ், மாவட்டப் பொருளாளர் வி. மணிகண்டன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர்கள் நவீன், கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.