தருமபுரி, ஆக.13- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோழர் ஏ.சுவாமிநாதன் நினைவரங்கத்தில் திங்களன்று நடைபெற்றது. இப்பேரவைக்கு மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பி.மகேஸ்வரி வர வேற்றார். மாநிலசெயற்குழு உறுப் பினர் எஸ்.லூசாமேரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டச்செயலாளர் சி.நாகராசன் துவக்கி வைத்து பேசினார்.மாவட்டச் செயலாளர் சி.காவேரி, மாவட்டப் பொருளாளர் கே. இராஜா ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் கே.அண்ணாதுரை, மாநிலச் செயலாளர் கே.சக்தி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
பேரவையில், சத்துணவு மையத் தில் பணிபுரியும் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர் களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வின்போது பணிக் கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பணி காலத்தில் இறக்கும் சத்துணவு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு நிபந்தனை யின்றி கல்வித்தகுதிக்கேற்ப காலி யாக உள்ள அரசுத்துறையில் பணி நியமனம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் இடமாறுதலை வெளிப்படையாக நடத்தி மாறுதல் ஆணை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பிடித்தம் செய்யப்பட்ட ஊதி யத்தை வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் 9 மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். 25 குழந்தைகளுக்குக் குறைவான பள்ளியில் உள்ள சத்துணவு மையங் களில் பணியாற்றும் ஊழியரின் வேலையை பறிக்கக்கூடாது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இப்பேரவையில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பட்டு வளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாநிலத் தலைவர் எம். சிவப்பிரகாசம், மோட்டார் வாகன பராமரிப்பு தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் கே.புக ழேந்தி, நில அளவை ஒன்றிப்பின் மாநில துணைத் தலைவர் அண்ணா குபேரன், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ரூத்ரையன், கூட்டு றவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.பழனி யம்மாள், பொது நூலகத்துறை அலு வலர் சங்க மாவட்டத் தலைவர் எம். முனிராஜ், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.தெய் வானை, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பி.நாகராஜன், ஓய்வுபெற்ற சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் இ.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் சி.பாபு நன்றி கூறினார்.