புதுக்கோட்டை, ஜூலை 27- சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக்கூட்டம் சனிக்கிழ மையன்று புதுக்கோட்டையில் நடை பெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலை வர் ச.காமராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் துரை.அரங்கசாமி வரவேற்றார். மாவட்ட இணைச் செய லாளர் ஆ.லெட்சுமணன் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, பொருளாளர் வெ.அன்னபூரணம் ஆகி யோர் அறிக்கை வாசித்தனர். மாநிலச் செயலாளர் கு.சத்தி சிறப்புரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பி.பாரதி வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத் தலைவர் பி.பாண்டி உரை யாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ப. செல்லத்துரை, வெ.சிங்காரம், ஆர்.ஜி. கருணாநிதி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்ட துணைத் தலைவர் கு.ராஜமாணிக்கம் நன்றி கூறி னார். சத்துணவு ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாது காப்புடன் கூடிய சட்ட ரீதியான மாத ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது ஒட்டு மொத்தப் பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.