திருவள்ளூர், ஆக. 10- சத்துணவு திட்டத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஏ.சிவா தலைமையில் சனிக்கிழமையன்று (ஆக. 10) திருவள்ளூரில் நடை பெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.குணசுந்தரி வரவேற்றார். துணைத் தலை வர் நாகராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.இளங்கோ வன் மாநாட்டை துவக்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சந்திரசேகரன் வேலை அறிக்கையை முன்மொழிந்தார். பொரு ளாளர் என்.டில்லிபாய் வரவு - செலவு கணக்கை சமர்பித்தார். மாநிலச் செயலாளர் கி.ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். காந்திமதி நாதன், பொரு ளாளர் இரா.பாண்டுரங்கன், சத்தியநாராயணன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.லட்சுமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் என்.தேவஅதிசயம் நன்றி கூறினார். சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், அமைப்பா ளர்கள் ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மாண வர்களுக்கு தரமான மதிய உணவு வழங்க விலை வாசிக்கேற்ப மானியத்தை உயர்த்தி தர வேண்டும், எரிவாயு அடுப்பை பழுது பார்க்கும் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.