கோவையில் அக்.10ல் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
கோவை, செப்.27- மாநகராட்சியில் அநியாய சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்.10 ஆம் தேதியன்று கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் கூட்டத் தில் முடிவெடுக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர் வாகம் நூறு சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியும், கோவை மாநகர மக்களின் குடிநீர் விநி யோக உரிமையை பிரான்சு நாட் டின் பன்னாட்டு சூயஸ் நிறு வனத்திற்கும் வழங்கியுள்ளது. மாநகர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியு றுத்தி செப்.27 ஆம் தேதியன்று திமுக தலைமையிலான காங்கி ரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக, சிபிஐ உள்ளிட்ட தோழமை கட்சி கள் மற்றும் பொதுநல அமைப்பு கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து மாநகர மக்கள் மீதான தாக்குதலை கைவிடுவதற்கு பதிலாக கோவை மாநகராட்சி, இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இததொடர்பாக தினசரி நாளி தழ்களில் பக்கம் பக்கமாக விளம் பரம் கொடுத்து உண்மையை மறைக்க முயற்சித்தது. அதே நேரம், முழு அடைப்பு போராட் டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. இருப்பி னும் வெள்ளியன்று பொது மக்கள், தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து மாநகராட்சியின் நட வடிக்கையை கண்டித்து தன் னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் முன்வைத்த கோரிக் கையை வலியுறுத்தி கோப்மா சங்கம் சார்பில் கோவையில் 3 ஆயிரம் தொழில்கூடங்கள் அடைக்கப்பட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக மாநகர் மாவட்ட பொறுப் பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் தோழமை கட்சி நிர் வாகிகள் கலந்து கொண்ட ஆலோ சனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், சொத்து வரி உயர்வு, குடிநீர் விநியோக உரிமையை தனியாருக்கு வழங் கப்பட்டதை ரத்து செய்ய வலியு றுத்தி திமுக தலைமையில் தோழமை கட்சியினருடன் இணைந்து அக்டோபர் 10 ஆம் தேதியன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. இதன்பின் செய்தியாளர்க ளிடம் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறுகையில், சூயஸ் திட்டம் திமுக ஆட்சியில் வந்ததாக அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகின்றார். கோவை மாநகர மக்களுக்கு 24 மணிநேரம் தங்கு தடையின்றி குடிநீர் திட்டம் வழங்குவதற்குத்தான் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தனியா ருக்கு தருவதற்காக இத்திட்டத்தை அன்று வழங்கவில்லை. இது தொடர்பாக ஒரே மேடையில் எஸ்.பி.வேலுமணி விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பி னார். மேலும், மக்களின் பிரச் சனைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார். முன்னதாக, இந்த ஆலோ சனை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயகுமார், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச்செயலாளர் ஆர்.தேவ ராஜ், திராவிடர் கழகத்தின் ச.சிற்ற ரசு, இ.யூ.முஸ்லிம் லீக் பி.முகமது பஷீர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோ.இலக்கியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா ளர் ஜெம்.பாபு, கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ்.தனபால், பி.பிரேம்குமார், ஆதித்தமிழர் பேரவை கோவை.ரவிக்குமார், எஸ்.டி.பி.ஐ. ராஜா உசேன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.