tamilnadu

தனியார் மருத்துவமனைகள் உரிய வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற வேண்டும் மருத்துவ இணை இயக்குநர் அறிவிப்பு

கோவை, ஜூலை 4- கோவை மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனை கள் அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி நோய்த்  தடுப்பு மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண் டும் என இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இணை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது, மருத்துவமனையின் நுழைவு வாயிலில் நோயாளிகள் உதவி மையம் ஏற்படுத்தி 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு உரிய தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். நோயாளிகள் மற்றும் அவருடன் வரும் உதவியாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.  

காய்ச்சல் பகுதி மற்றும் கொரோனா பரிசோதனை பகுதி தனியாக அமைத்தி ருத்தல் வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிய பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி மருத்துவக் கழிவுகளை சேகரித்து வகைப்படுத்தி அரசு பதிவு பெற்ற மருத்துவக் கழிவுகளை எடுத்துச் செல்லும் நிறுவ னத்திடம் உரிய பாதுகாப்பு விதிகளின்படி ஒப்படைத்தல் வேண்டும்.

நோய்த் தொற்று பரவாமல் இருக்கும் பொருட்டு அரசு நிர்ணயித்துள்ள கிருமிநாசினிகள் கொண்டு முழு மருத்துவமனையை தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரத் திற்கு ஒரு முறை தூய்மைப்படுத்துதல் வேண்டும்.  அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா நோய் பரிசோதனை செய்யவில்லை என்று முதலுதவி செய் யாமல் உடனே திருப்பி அனுப்பக் கூடாது.

முதலுதவி செய்து உரிய மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கண்கா ணிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் கொரோனா நோயாளிக ளுக்கு அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறை களின்படி நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் செய்யப் படல் வேண்டும்.

இதன் விபரங்களை மாவட்ட இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் ஆகியோருக்கு கண்டிப் பாக தெரியப்படுத்தல் வேண்டும்.

இத்தகைய அரசின் வழி காட்டுதல்களை மீறும் தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இணை இயக்கு நர் தெரிவித்துள்ளார்.