tamilnadu

img

நாமக்கல்லில் அஞ்சல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

நாமக்கல், அக்.16- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் 30 முதல் ஓய்வு  பெற்றவர்கள் அனைவருக்கும் நேஷனல் இன்கிரி மெண்ட் வழங்க வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் தர்ணா போராட்டம் புதனன்று நடைபெற்றது.  தபால்காரர்களின் ஓய்வூதியம் தாமதமில்லாமல் மறு நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். கட்டாய ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் வி.கே.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ணாவை அஞ்சல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் த.மணி துவக்கி வைத்து பேசினார். மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவன ஓய்வூ தியர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.இளங் கோவன் நிறைவுரை ஆற்றினார்.