tamilnadu

img

அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

தருமபுரி, அக்.15- அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களுக்கு ஊதிய உயர்வுகோரி தருமபுரியில் தொலைபேசி நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல் தபால் காரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். கட்டாய ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஜூன் 30 முதல் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஊதிய உயர்வு, ஓய்வுக் கால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. சுப்பிரமணியன், பொருளாளர் எஸ்.சுப்பிரமணியன், மாநிலத் துணைச்செயலாளர்  பி.சங்கு மற்றும் நிர்வாகிகள் அறிவழகன், அண்ணாமலை, மன்னார், கிருஷ்ணமூர்த்தி, ராமன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்