பொள்ளாச்சி, மே 4-பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக உறுப்புகல்லூரியில் திங்களன்று மாலை 3 மணிக்குள் பூர்த்தி செய்தவிண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திலுள்ள சமத்தூர் இராம.ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2019 -20 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 684 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 560 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை மாலை 3 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் பன்னிரண்டாம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்று நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து மே 10 ம் தேதியன்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.