கோவை, ஜூலை 9– தேயிலை தோட்ட தொழிலாளர் களுக்கு விடுமுறை நாள் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு கோவை மாவட்ட தோட்ட தொழிலாளர் மற்றும் அலு வலர் சங்கத்தின் மகாசபை ஞாயி றன்று வால்பாறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மகாசபையை சிஐடியு மாவட்ட துணை செயலாளர் என்.செல்வராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். மலைவாழ்மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பரம சிவம் வாழ்த்தி பேசினார். இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எம்.முனீஸ்வரி, பொதுச் செயலாளராக பி.பரமசிவம், பொரு ளாளராக எம்.சக்திவேல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
தீர்மானங்கள்
எஸ்டேட் பகுதியிலுள்ள மருத் துவமனைகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை போக்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதிய உபகரணங்கள் வரவழைத்து தொழிலாளர்களுக்கு முறையான சிசிச்சை அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள போனஸ் உச்சவரம்பை மாற்றி 20 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். தினக் கூலி ரூ.450 வழங்க வேண்டும். மலைப்பகுதியில் இயங்கும் பழு தான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.