சென்னை, ஆக. 14- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்ட மாநாடு தேனாம்பேட்டையில் தோழர் மனோகரன் நினைவரங்கில் புதனன்று (ஆக. 14) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.கேசவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இ.குப்பம்மாள் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பகம் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாநிலச் செயலாளர் கே.சுபந்தி மாநட்டை துவக்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் கே.தங்கம் வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.சுந்தர மூர்த்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் வட, தென் சென்னை மாவட்டச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஜெ.பட்டாபி, முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.சொர்னம், முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.தேவிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் பி.சுந்த ராம்மாள் மாநாட்டை நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலா ளர் கே.காளிதாஸ் நன்றி கூறினார். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அமைப்பாளர், சமைய லர், உதவியாளர் அனை வரையும் முழுநேர அரசு ஊழியராக நியமனம் செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உணவு மானியத் தொகையை ரூ. 5 உயர்த்தி வழங்க வேண்டும், புதிய காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டம் இல்லாத அனைத்து சத்துணவு மையங்களுக்கும் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
புதிய நிர்வாகிகள்:
தலைவராக ஆர்.கேசவன், செயலாளராக இ.குப்பம்மாள், பொருளாளராக எஸ்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டு 15 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.