திருநெல்வேலி, ஜூலை 27- பிரதமர் குடியிருப்பு திட்ட வீடுகள் கட்ட நெருக்கடியை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 9ஆவது மாநில மாநாடு 2 நாட்கள் நடை பெற்றது. வெள்ளிக்கிழமை எழுச்சியுடன் துவங்கிய இந்த மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் க.துரைசிங் வரவேற்றுப் பேசினார். முன்னாள் பொதுச்செயலாளர் ந.சேகர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து தலைவர்கள் வாழ்த்தி பேசினர். 2ஆம் நாள் மாநாடு பிரதிநிதிகள் மாநாடாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். சங்க மாவட்டச் செயலாளர் க.சுப்பிரமணி யன் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில தலை வராக எஸ்.ரமேஷ், பொதுச்செய லாளராக ச.சபரி, பொருளாளராக மா.விஜய பாஸ்கர்,மாநில துணை தலைவர்களாக ந.திருவேரங்கன்,எம்.பழனியப்பன், எஸ்.காந்திமதி நாதன், வெ.சண்முக சுந்தரம், ஆர்.ஆறுமுகம், ஜெ.பாஸ்கர்பாபு, மாநில செயலாளர்களாக மு.செல்வகுமார், ந.ஜெயசங்கர், ச.ராஜசேகர், ஆர்.சௌந்தரபாண்டியன், பி.சார்லஸ் சசிகுமார், நா.புகழேந்தி மற்றும் மாநில தணிக்கையாளர்களாக கோவை வே.செந்தில்குமார், நாகை ஜ.ரூக்நிஷா உட்பட 17 பேர் கொண்ட மாநில நிர்வாக குழு தேர்ந்தெடுக்க ப்பட்டது.
தீர்மானங்கள்
ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் , ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய் ய வேண்டும், அரசாணை 71-ன் படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பெரிய ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை பிரித்திட வேண்டும். பிரிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு பணியிட அனுமதி வழங்க வேண்டும் ,முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான பணி நியமனத்தை அரசாணை 207-ன் படி அமலாக்கம் செய்ய வேண்டும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கு நீதித்துறை பயிற்சி வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் பெறப்பட்டதற்காக வளர்ச்சி துறை அலுவலர்கள் மீது பிறப்பிக்கப்படும் குற்றச்சாட்டும் புகார்கள் போன்ற நிகழ்வுகளில் ஒய்வு பெறுவதற்கு 6 மாத காலத்திற்கு முன் செய்தும் 6 மாத காலத்திற்குள் விதி 9(ஏ)வின் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பாரத பிரதமர் குடியிருப்பு திட்ட வீடுகள் கட்ட நெருக்கடியை கைவிட வேண்டும். பொறியியல் பிரிவுக்கு ஈர்ப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலக துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1-09-2019 அன்று தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்து வது, 13-09- 2019 அன்று சென்னை இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது உட்பட 21 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.